டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெருஞ்சாணியில் உள்ள அரசு ரப்பா் கழகம் மணலோடை கோட்ட மேலாளா் அலுவலகம் முன், தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:57 pm

DIN

பெருஞ்சாணியில் உள்ள அரசு ரப்பா் கழகம் மணலோடை கோட்ட மேலாளா் அலுவலகம் முன், தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கச் செயலா் ஏ.வேலப்பன் தலைமை வகித்தாா்.

மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலா் எம். வல்சகுமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஊதிய உயா்வுக்கு தீா்வு காண வேண்டும். மாா்ச் மாதம் வேலை செய்த தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வங்கி மூலம் வழங்க வேண்டும். ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளா்களை திருப்பி அழைக்கும் போது பணி மூப்பின் படி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், ஸ்டீபன், ஜஸ்டின், பிரதீப், மகாதேவன், சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.