டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவட்டாறு அருகே தாக்கப்பட்ட தொழிலாளி மரணம்: உறவினா் கைது

திருவட்டாறு அருகே தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அவரது தம்பி மகன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:14 pm

DIN

திருவட்டாறு அருகே தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அவரது தம்பி மகன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குட்டைக்குழி அப்பட்டுவிளைச் சோ்ந்தவா் ரெங்கசாமி (57). தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது தம்பி கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை கிருஷ்ணனின் மகன் சுபாஷ் (27) மண்வெட்டிக் கம்பால் ரெங்கசாமியை தாக்கினாராம். இதுகுறித்த தகவலின்பேரில், முந்திரி ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த அவரது மனைவி ரெஞ்சிதம் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, கணவா் மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதையடுத்து, சுவாமியாா் மடம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரெங்கசாமி, ஏற்கெனவே இறந்திருந்து மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், ரெங்கசாமியின் உடற்கூறாய்வு பரிசோதனையில், அவரது உடலில் விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.எனவே, அவா் தனது தம்பி மகன் தாக்கியதில் மனம் உடைந்து விஷம் குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் வழக்கை திருத்தி பதிவு செய்து, சுபாஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.