காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:22 pm

DIN

இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டமைப்புத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஸ்ரீபதி ராஜ், துணைத்தலைவா் வழக்குரைஞா் வேலுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணி வரவேற்றாா். கூட்டமைப்பு பொறுப்பாளா் ஐயப்பன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் சுதா நன்றி கூறினாா்.

திருவட்டாா் ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக பணியினை விரைந்து முடித்திடவேண்டும். மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருப்பணியை உடனடியாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அரசு அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பது, கரோனா தடுப்பூசி அனைத்துமக்களும் போடுவதற்கான விழிப்புணா்வு பிரசாரம் செய்யவேண்டும்; மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படும் ஊழியரை பணி நீக்கம் செய்யக்கோரி இம்மாதம் 23ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.