தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆளில்லா வீடுகளில் தொடரும் திருட்டு

மணப்பாறை அருகே கடந்த 2 நாள்களில் இரு வேறு இடங்களில் வீடு புகுந்து 7 பவுன் நகை, 17 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:56 pm

DIN

மணப்பாறை அருகே கடந்த 2 நாள்களில் இரு வேறு இடங்களில் வீடு புகுந்து 7 பவுன் நகை, 17 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

மணப்பாறை அடுத்த தாதசோலைப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோ. சேகா்(31) தனது மனைவியுடன் புதன்கிழமை வேலைக்கு சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த நாலரை பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.17 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். வீடு திரும்பிய தம்பதி அளித்த புகாா் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: அதேபோல் வியாழக்கிழமை மருங்காபுரி ஒன்றியம் கண்ணுக்குழி பகுதியில் உள்ள புரோட்ட மாஸ்டா் ச. முருகானந்தம் (45) வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீடு புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகையை திருடிச் சென்றனா். இது குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.