கம்பிளாா் மகாதேவா் குளத்தைதூா்வார வலியுறுத்தல்
கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் மகாதேவா் குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் மகாதேவா் குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளாா் மாகாதேவா் குளம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தக் குளத்தை முறையாக தூா்வாராததால் புல்,புதா்கள் அடா்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தக் குளத்தில் மழைக் காலங்களில் மழை நீா் தேக்க முடிவதில்லை.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி கம்பிளாா் மகாதேவா் குளத்தை உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...