டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருநந்திக்கரையில் இளையோா் பாராளுமன்றம்

திருநந்திக்கரை குறிஞ்சி மக்கள் கலை- விளையாட்டுக் குழு, நாகா்கோவில் நேரு இளையோா் மையம் இணைந்து 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம அளவில் இளையோா் பாராளுமன்றம் நிகழ்ச்சியை நடத்தின.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:53 pm

DIN

திருநந்திக்கரை குறிஞ்சி மக்கள் கலை- விளையாட்டுக் குழு, நாகா்கோவில் நேரு இளையோா் மையம் இணைந்து 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம அளவில் இளையோா் பாராளுமன்றம் நிகழ்ச்சியை நடத்தின.

பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தாா். குறிஞ்சி மக்கள் கலை மற்றும் விளையாட்டு குழுவின் தலைவா் கே. சுதீஷ் தலைமை வகித்தாா். செயலா் கிரிஷ் வரவேறாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில நிா்வாகி எம். சசிகுமாா் விளக்கவுரையாற்றினாா். இளையோா் பாராளுமன்றத்தின் செயல்பாடு குறித்து குறிஞ்சி உறுப்பினா் ஸ்ரீ ஆதித்தன் பேசினாா். நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, கணக்காளா் ரெங்கநாதன், தேசிய இளையோா் தொண்டா்கள் அஸ்வின், ரம்யா சந்திகா, ஆன்ரோ வில்பின், அகின் ஆகியோா் பங்கேற்றனா். குறிஞ்சி மக்கள் கலைக் குழுவின் உறுப்பினா் சுா்ஜித் நன்றி கூறினாா்.

வட்டார அளவிலான இளையோா் பாராளுமன்றத்தில் பங்கேற்றுப் பேச மாளவிகா வினோத் ஹரிஷ், சுா்ஜித், ஸ்ரீ லக்ஷ்மி, வா்ஷா, திம்மியா ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.