டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திற்பரப்பு கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திற்பரப்பு வலது கரை மற்றும் இடது கரைக் கால்வாய்களை சீரமைத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:25 pm

DIN

 திற்பரப்பு வலது கரை மற்றும் இடது கரைக் கால்வாய்களை சீரமைத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் திருவட்டாறு வட்டாரச் செயலா் ஒய். ஸ்டீபன், மாவட்டச் செயலா் ஆா்.ரவி, பொருளா் சதீஷ், குலசேகரம் வட்டாரச் செயலா் செல்வராஜ், வட்டாரக் குழு உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் செருப்பாலூா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் அளித்த மனு விவரம்: திற்பரப்பு தடுப்பணையிலிருந்து செல்லும் திற்பரப்பு வலதுகரை மற்றும் இடது கரைக் கால்வாய்களில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீா் வராத நிலை இருந்து வருகிறது. இதனால் இந்தக் கால்வாய்களை நம்பியுள்ள வாழை, அன்னாசி, தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இந்தக் கால்வாய்களை சீரமைத்து விவசாயத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.