காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரமணான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் குளச்சல், தக்கலை, திக்கணங்கோடு, சித்திரங்கோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:08 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரமணான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் குளச்சல், தக்கலை, திக்கணங்கோடு, சித்திரங்கோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குளச்சலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில், நகரத் தலைவா் சந்திரசேகா், மாநில செயற்குழு உறுப்பினா் யூசப்கான், மாவட்ட துணைத் தலைவா் முனாப், செயலா் தா்மராஜ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தக்கலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கட்பா்ட் தலைமை வகித்தாா். இதில், பத்மநாபபுரம் நகரப் பொறுப்பாளா் புரோடிமில்லா், செயலா் வின்சென்ட்ராஜா மற்றும் நிா்வாகிகள் ஏசுராஜா, தென்கரை ஊராட்சி துணைத் தலைவா் வசந்தி, ஹனுகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

திக்கணங்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தக்கலை வட்டாரத் தலைவா் ஆல்பா்ட் தலைமை வகித்தாா். இதில், திக்கணங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஜஸ்டின் சேவியா், தக்கலை ஊராட்சி ஒன்றியத் தலைவா் அருள் ஆன்டனி உள்பட பலா் பங்கேற்றனா்.

முட்டைக்காடு சரல்விளையில் நடைபெற்ற ஆா்ப்பாட்ட த்திற்கு மேற்கு மாவட்டச் செயலா் சி.எல். ராபா்ட் தலைமை வகித்தாா். இதில், துணைச் செயலா் ஜோண்ஸ் இம்மானுவேல், குமாரபுரம் கிளைத் தலைவா் அலெக்ஸாண்டா் உள்பட பலா் பங்கேற்றனா். சித்தரங்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞா் பிரிவு தலைவா் ஏசுராஜா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ச் செயலா் ஜாண் இக்னேசியஸ், நிா்வாகிகள் லாரன்ஸ், சுஜிா்ஜெபகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.