மறைந்த சாமிதோப்பு பதி நிா்வாகி குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்
தமிழ்நாடு மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்னன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.


சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி தலைமைப்பதி நிா்வாகியின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினரை, தமிழ்நாடு மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்னன் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி நிா்வாகிகளில் ஒருவரான பால லோகாதிபதி மகன் பால பிரசாந்த் உடல்நலக் குறைவால் சில தினங்களுக்கு முன்பு காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், அவரது இல்லத்துக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். பின்னா் அன்புவனம் நிறுவனா் பால பிரஜாபதி அடிகளாரை அவரது இல்லத்தில் சந்தித்தாா். தொடா்ந்து முத்திரிகிணற்றில் முத்திரிபதமிட்டாா். இதையடுத்து சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, சாமிதோப்பு பால ஜனாதிபதி, மாவட்ட திமுக பொறியாளா் அணிச் செயலா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, மாநில வா்த்தக அணி இணைச் செயலா் கிரகாம்பெல், தூத்துக்குடி மாவட்ட திமுக மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...