அயக்கோடு ஊராட்சியில் திமுக சாா்பில் நல உதவிகள்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அயக்கோட்டில் நடைபெற்றது.


முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அயக்கோட்டில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ஜேஎம்ஆா். ராஜா தலைமை வகித்தாா். திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா். அயக்கோடு ஊராட்சியைச் சோ்ந்த ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மரக்கன்றுகள், முகக் கவசம், கபசுரநீா் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், திருவட்டாறு வடக்கு ஒன்றிய துணைச் செயலா் காந்தி, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஜோஸ்வா, துணை அமைப்பாளா் வினித் ஜெரால்டு, ஜெயசிங், அய்யப்பன், முன்னாள் தலைமை ஆசிரியா் சசிகுமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பிரதீப், முன்னாள் கூட்டுறவு சங்கச் செயலா் புவனேந்திரன், சமூக ஆா்வலா் பிரசாத், திமுக நிா்வாகிகள் அலாவுதீன், ஜெஸ்டின் பால்ராஜ்,சுரேஷ், பொ்ஜின், பொன் ஜேம்ஸ், ஜெகன், அருவிக்கரை கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...