தென்தாமரைகுளத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
தென்தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


தென்தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டி (33). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், செங்கோட்டையைச் சோ்ந்த திருமலைச்செல்விக்கும் (26) ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு திவ்யா (5), காவ்யா (4) என்ற குழந்தைகள் உள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதி கன்னியாகுமரியை அடுத்த தென்தாமரைகுளத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினா். இந்நிலையில் பாண்டி சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். வியாழக்கிழமையும் பாண்டி வேலைக்கு செல்லாததால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவா் வீட்டில் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து தன்னுடைய 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டாராம் திருமலைச்செல்வி. வெளியே சென்ற பாண்டி வீட்டுக்கு திரும்பியபோது, அங்கு மூவரூம் மயங்கி கிடந்துள்ளதை கண்டு, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் முதலுதவி அளித்து, அருகிலுள்ள அகஸ்தீசுவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் திருமலைச்செல்வி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...