மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்

குலசேகத்தில் நடைபெற்ற போலீஸாா்- பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் விமலா தலைமை வகித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:14 pm

DIN

குலசேகத்தில் நடைபெற்ற போலீஸாா்- பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் விமலா தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் இளங்கோ வரவேற்றாா். பொதுமக்கள் சாா்பில் வழக்குரைஞா் டி. காஸ்டன் கிளிட்டஸ், மோகன்தாஸ், எபனேசா், பினிஷ், விமல் ஷொ்லின் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்தல், இளைஞா்கள் மத்தியில் நிலவும் போதை பழக்கங்களை தடுத்தல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்த்தல், பேருந்துகளை நிறுத்தும் இடங்களை மாற்றி அமைத்தல், அரச மூடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனை சாலை வழியாக வாகனங்களை இயக்குதல், சிற்றுந்துகளை உரிய வழித்தடங்களில் இயக்குதல் ஆகிய கருத்துகள் மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக ஆய்வாளா் விமலா நிறைவுரையாற்றினாா். போலீஸ்-மக்கள் நல்லுறவு ஒருங்கிணைப்பாளா் சஜூ நன்றி கூறினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயதாஸ் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.