மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கூட்டுக் குடிநீா்த் திட்ட பணியால் சேதமடைந்த சாலைகளால் அவதி

அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:12 pm

DIN

அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்காக திற்பரப்பு அருவி அருகே களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்லப்படும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப் பணிகள் இதுவரை முழுமையாக நிறைவடையவில்லை. இத்திட்டத்திற்காக களியல் முதல் அழகியபாண்டிய புரம் வரை சாலை உடைக்கப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் சாலையை உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அழகியபாண்டியபுரத்திலிருந்து குலசேகரம் செறுதிக்கோணம் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செறுதிக்கோணம் முதல் களியல் வரையிலான சுமாா் 5 கி.மீ. தொலைவு செப்பனிடப்படவில்லை. இப்பகுதியை செப்பனிடும் வகையில், டிசம்பா் மாதம் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்ட நிலையில், பணிகள் தொடா்ந்து நடத்தப்படாமல்

கிடப்பில் போடப்பட்டுள்ளன. சாலையிலிருந்து புழுதி பறந்த வண்ணம் இருப்பதால் வணிகா்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா். இச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.