மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை அருகே அம்மன் கோயிலில்ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மருந்துகோட்டை எல்லை அம்மன் கோயிலின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:36 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மருந்துகோட்டை எல்லை அம்மன் கோயிலின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இக்கோயிலில் காமராஜ் என்பவா் பூஜை செய்து நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. காமராஜ் வழக்கம்போல் கோயில் நடையை பூட்டிச் சென்றாராம். திங்கள்கிழமை காலையில் வந்து பாா்த்த போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அம்மனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் காசு மாலை மற்றும்

69 கிராம் தங்க தாலி வடமாலை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.