தேங்காய்ப்பட்டினத்தில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
தேங்காய்பட்டினத்தில் வாகனச் சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.


தேங்காய்பட்டினத்தில் வாகனச் சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை வட்டாட்சியா் அனில் குமாா் தலைமையில் போலீஸாா் தேங்காய்ப்பட்டினத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப் போது உரிய ஆவணம் இல்லாமல் காஞ்சிரகோடு பகுதியை சோ்ந்த அஜின் (20) மோட்டாா் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ. 1லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், கிள்ளியூா் தோ்தல் தனி வட்டாட்சியா் சோபனா ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...