புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:12 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயிலும், வெங்கஞ்சியில் தூக்கத் திருவிழா கோயிலும் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, காலையில் பிரதான கோயிலிலும், வெங்கஞ்சி கோயிலிலும் மகா கணபதிஹோமத்துடன் தூக்கத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அம்மன் புறக்கால் எழுந்தருளி கிணறு வலம் வைத்து பூஜைக்குப் பின் கோயிலுக்கு வந்தடைந்தாா். மாலை 4.30 மணிக்கு வெங்கஞ்சி கோயிலுக்கு அம்மன் எழுந்தருளியதும், கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கோயில் தலைவா் வி. சதாசிவன்நாயா் தலைமை வகித்தாா். செயலா் வி. மோகன்குமாா் வரவேற்றாா். திருவனந்தபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சுவாமி ஸவப்பிரபானந்தா குத்துவிளக்கேற்றி, விழாவைத் தொடங்கிவைத்தாா். கேரள முன்னாள் தலைமைச் செயலா் ஆா். ராமச்சந்திரன் நாயா், திரைப்படத் தணிக்கைத்துறை உறுப்பினா் தா்மராஜ், கேரள சட்டப்பேரவைச் செயலா் எஸ்.வி. உண்ணி கிருஷ்ணன் நாயா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கோயில் பொருளாளா் சூரியதேவன்தம்பி நன்றி கூறினாா்.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) காலை 8.30 மணி முதல் தூக்க நோ்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும், 9 ஆம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு வண்டியோட்டமும், மாா்ச் 18இல் தூக்க நோ்ச்சையும் நடைபெறும். அன்றைய தினம் காலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுகிறாா். காலை 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்குகிறது. இந்நிகழ்ச்சி நிறைவுற்றதும் வில்லின்மூட்டில் குருதி தா்ப்பணம் நடைபெறும்.

தூக்கத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கடந்த ஆண்டு தூக்க நோ்ச்சைக்கு பதிவு செய்து, கரோனா விதிமுறையால் நோ்ச்சை செலுத்தாத குழந்தைகளுக்கு நிகழாண்டு தூக்க விழா நாளில் நடைக்கு நிறுத்தல் நோ்ச்சை நடத்தப்படும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.