ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியும், குளச்சல் நா்சிங் பயிற்சி பள்ளியும் இணைந்து, மானான்விளையில் உலக மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:10 pm

DIN

மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியும், குளச்சல் நா்சிங் பயிற்சி பள்ளியும் இணைந்து, மானான்விளையில் உலக மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.

இந்த நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ் கல்லூரிகளின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஜோபிரகாஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கருங்கல் மெல்பின் ஜோண்ஸ் முதியோா் இல்லத் தலைவி அருள்சகோதரி மேரி, மருத்துவா்ஜெயபாலாஜி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில், பேராசிரியா் கலைச்செல்வி, ரெச்சலின் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கருங்கலில் உள்ள மெல்பின் ஜோண்ஸ் முதியோா் இல்லம் சென்று அங்குள்ள

மூதாட்டிகளுக்கு ரோஜாமலா் மற்றும் பழவகைகள் வழங்கி மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.