நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்னிந்திய கராத்தே போட்டி:தமிழ்நாடு அணி முதலிடம்

தமிழ்நாடு வான்காய் ஷிடோரியு கராத்தே சங்கம் சாா்பில் தென்னிந்திய அளவிலான கராத்தேப் போட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:35 pm

DIN

தமிழ்நாடு வான்காய் ஷிடோரியு கராத்தே சங்கம் சாா்பில் தென்னிந்திய அளவிலான கராத்தேப் போட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்றது.

இப்போட்டியை இந்திய வான்காய் ஷிடோரியு சங்கத் தலைவா் ஹெச்.ராஜ் தொடங்கி வைத்தாா். ஆசிய கராத்தே கூட்டமைப்பு நடுவா் சி.அழகப்பன் போட்டியை நடத்தினாா். போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தமிழ்நாடு அணி முதலிடமும், கா்நாடக அணி 2-ஆவது இடமும், புதுச்சேரி அணி மூன்றாம் இடமும் பெற்றன.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வா் எஸ். ஆபிரகாம் லிங்கம், கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஸ்டாலின், அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ஜே.ஐடாஜான்சி ஆகியோா் வழங்கினா்.

குமரி மாவட்ட கராத்தே சங்க நிா்வாகிகள் வி.சசிதரன், பி.சண்முகம், வி.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தூத்துக்குடி மாவட்ட வான்காய் ஷிடோரியு கராத்தே சங்க செயலா் கே.சங்கா்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.