பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப் பூ பருவம் சாகுபடி நிறைவடைந்ததால் திங்கள்கிழமை பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப் பூ பருவம் சாகுபடி நிறைவடைந்ததால் திங்கள்கிழமை பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆம் பருவ நெல் சாகுபடியான கும்பப் பூ பருவம் சாகுபடி நிறைவடைந்த நிலையில்
இம்மாவட்டத்திலுள்ள அணைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும் குடிநீா்த் தேவையை கருத்தில் கொண்டும் அடுத்த சில நாள்கிளில் பேச்சிப்பாறை அணை
மூடப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், பெருஞ்சாணி அணை திங்கள்கிழமை மூடப்பட்டது. சிற்றாறு 1, 2 அணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 38.05 அடி, பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 52.55 அடி,
சிற்றாறு அணை-1 நீா்மட்டம் 5.64, அணை-2ன் நீா்மட்டம் 5.74 அடியாக இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 334 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 261 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...