சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மீன் வியாபாரியிடம்ரூ. 1.13 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீன் வியாபாரியிடம் ரூ. 1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :15 மார்ச் 2021, 7:32 pm

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீன் வியாபாரியிடம் ரூ. 1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் அதிகாரி செல்வி தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வின்சென்ட், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவில் நித்திரவிளை அருகேயுள்ள விரிவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் ரூ. 1.13 லட்சம் இருந்தது. விசாரணையில் வியாபாரத்துக்கு மீன்கள் கொள்முதல் செய்வதற்காக பணம் கொண்டு செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனராம்.. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டதால், அதிகாரிகள் ரூ. 1.13 லட்சத்தை பறிமுதல் செய்து கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.