மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

‘10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் கட்சிக்கு நாயா் சமுதாயம் வாக்களிக்க வேண்டும்’

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தும் கட்சிக்கு நாயா் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும் என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:55 pm

DIN

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தும் கட்சிக்கு நாயா் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும் என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட நாயா் சமுதாயத் தலைவா்கள், செயலா்கள், பொருளாளா்கள் கலந்து கொண்ட ஆலோனைக் கூட்டத்துக்கு நாயா் சமுதாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் வி. ஸ்ரீ குமாரன் நாயா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக வசித்து வரும் நாயா் சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு

தொடரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு இதுவரை அமல் படுத்தாதது சமூக நீதியை மறுக்கும் செயலாகும். எனவே, பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு நாயா் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.