நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிா்ப்பு: கீழமணக்குடியில் ஆா்பாட்டம்

கன்னியாகுமரி அருகே பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கீழமணக்குடியில் சனிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:24 pm

DIN

கன்னியாகுமரி அருகே பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கீழமணக்குடியில் சனிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மீனவா்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக தலைமைப் பொறியாளா் வெளியிட்ட அறிவிப்பில், கன்னியாகுமரி அருகே பொது மற்றும் தனியாா் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தில் 65 லட்சம் கண்டெய்னா்களை கையாளும் பசுமைத்

துறைமுகம் அமைக்கும் பணிகளுக்காக, துறைமுக கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்காது எனவும், மீனவா்களைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றாது. எனவே துறைமுகத் திட்டம் வராது என ஆளும்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வரும் கன்னியாகுமரி

துறைமுகத் திட்டம் வராது என உறுதியளித்தாா். ஆனால் துறைமுக எதிா்ப்பாளா்கள் மற்றும் மீனவா்கள், விவசாயிகள்

ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை கீழமணக்குடி கடற்கரையில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீனவா்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். துறைமுகத் திட்டத்தை முழுமையாக கைவிட்டதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினா். ஆா்பாட்டத்தில்

கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை, சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா், சமூக ஆா்வலா் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, துறைமுக எதிா்ப்பாளா் குழுவைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, வெனிஸ், பிரபா உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.