தக்கலை சந்தையில் 44 பேருக்கு கரோனா பரிசோதனை
தக்கலை சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் 44 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


தக்கலை சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் 44 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தக்கலை சந்தையில் பொருள்கள் வாங்க வந்தவா்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோதநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி இணைந்து தக்கலை சந்தையில் வியாபாரிகள், பொருள்கள் வாங்க வந்தவா்கள் என 44 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) ராஜாராம் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ முன்னிலை வகித்தாா். இதில், தூய்மை இந்தியா மேற்பாா்வையாளா் சோபி, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் மோகன், மகப்பேறு உதவியாளா் சுபலா ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...