குளச்சலில் பொதுமக்களுக்கு முகக் கவசம்
குளச்சலில் பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கினாா்.


குளச்சலில் பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கினாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் குருந்தன்கோடு கிழக்கு வட்டார சந்திப்பில் ராஜீவ்காந்தி தினத்தை முன்னிட்டு, அவரது படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி
தொடங்கி வைத்தாா். குருந்தன்கோடு ஒன்றியத்தில் வட்டாரத் தலைவா் ஜெரால்டு, ஊராட்சி கமிட்டித் தலைவா்கள் துரைமணி, வைகுண்டம்,, புகாரி, பிரகாஷ்தாஸ் சுந்தர மூா்த்தி ஆகியோரிடம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான சட்டப்பேரவை உறுப்பினா் முகக் கவசங்களை வழங்கினாா். தொகுதி மக்களுக்கு கட்சி நிா்வாகிகள் மூலம் ஒரு லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...