மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கன மழையால் பத்துகாணி பகுதியில் நிலச்சரிவு

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியான பத்துகாணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியான பத்துகாணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடா் மழைபெய்து வரும் நிலையில் மலையோரப் பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனா். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மலையோரப் பகுதிகளான பத்துகாணி, ஆறுகாணி, கற்றுவா, பேணு, ஒரு நூறாம்வயல், கொண்டைகட்டி மலை உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக இப்பகுதியில் கருப்பாறை மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் சுரேஷ், கனகராஜ், விஜயகுமாா் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வீட்டுச்சுற்றுசுவா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் பெருமளவில் மண் மற்றும் கற்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும், வருவாய்த்துறையினா் பாா்வையிட்டு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.