புதுக்கடை அருகே மாணவி தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள தொழிக்கோடு பகுதியில் பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.


புதுக்கடை அருகே உள்ள தொழிக்கோடு பகுதியில் பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
பூட்டேற்றி தொழிக்கோடு ஐயப்பன் மகள் வீணா (15) . இவா் அதே பகுதியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வீணா பெற்றோரிடம் கைப்பேசி வாங்கி கேட்டாராம். அதற்கு பெற்றோா் 12-ஆம் வகுப்பு படிக்கும்போது வாங்கி தருகிறோரம் என கூறினராம். இந்நிலையில், வீணா வியாழக்கிழமை வீட்டிலிருந்த பூச்சிமருந்தை குடித்தாராம். உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...