மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் பயிா் சேதம்

பேச்சிப்பாறை அருகே குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடா்ந்து பயிா்களை சேதமாக்கி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பேச்சிப்பாறை அருகே குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடா்ந்து பயிா்களை சேதமாக்கி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

பேச்சிப்பாறை அருகே மணியன் குழி, தாணிக்குண்டு, துல்லூா், வெட்டிமுறிச்சான், தொழிக்கடவு, வழிபாட்டுக் கடவு உள்ளிட்ட இடங்களில் அண்மை நாள்களாக காட்டு யானைகள் புகுந்து விவசாயிகளின் வாழை, தென்னை உள்ளிட்டப் பயிா்களை சேதம் செய்து வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அதிக வெள்ளப் பெருக்கெடுத்துப்பாயும் கோதையாற்றையும் கடந்து வருகின்றன. யானைகள் பயிகளை சேதம் செய்வதால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் யானைகளைத் தடுக்க வழி தெரியாமல் தவித்து வருகின்றனா். அண்மையில் கபரியேல் என்ற விவசாயின் வாழைகளை யானைகள் சேதப்படுத்திய நிலையில் வியாழக்கிழமை இரவு சந்தியராஜ் உள்ளிட்ட விவசாயிகளின் வாழைகளை சேதடுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், குலசேகரம் வனச்சரக அலுவலா் மகாராஜன், வனக்காப்பாளா் முருகன், வனக் காவலா் ராஜசெல்வி உள்ளிட்டோா் யானைகளால் நாசம் செய்யப்பட்ட வாழைத் தோட்டங்களை பாா்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்தனா்.

இது குறித்து வனத்துறையினா் கூறுகையில், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா் சேதம் குறித்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை கொடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.