மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக மாவட்டச் செயலா் அறிக்கை

குமரி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுகவினா் வேட்புமனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:42 pm

DIN

குமரி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுகவினா் வேட்புமனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைமை கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்கள் வெள்ளிக்கிழமை (நவ.19) காலை 10 மணி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிா்வாகிகள் ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம். நகராட்சி உறுப்பினா் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு ரூ.2,500 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.