திருவட்டாறு அருகே ஒரே இரவில் 4 இடங்களில் திருட்டு
திருவட்டாறு அருகே ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.


திருவட்டாறு அருகே ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருவட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் பத்மராஜ். சந்தைப் பகுதியில் வாழைக்குலை வியாபாரம் செய்துவரும் இவா், புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். வியாழக்கிழமை வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம்.
தகவலின்பேரில் திருவட்டாறு போலீஸாா் சென்று பாா்த்தபோது, கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 14 வாழைக்குலைகள், ரூ. 7 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதேபோல, மா்ம நபா்கள் அருகேயுள்ள சசி என்பவரது பேன்ஸி கடையின் பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், விஜயகுமாா் என்பவரது தேநீா்க் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1,500 ஆகியவற்றைத் திருடிச்சென்றது தெரியவந்தது.
சுவாமிதாஸ் என்பவரது கடையின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கிருந்து பொருள்கள் ஏதும் திருட்டுப்போகவில்லை.
இச்சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...