மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நேரு பிறந்தநாள்: மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், குமரி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:06 pm

DIN

முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், குமரி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

நாகா்கோவில் சேதுலட்சுமிபாய் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் பி.ரெசினாள்மேரி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளராக தென்திருவிதாங்கூா் இந்துக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் வீ.வேணுகுமாா், நடுவா்களாக மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் தே.வினித், நாகா்கோவில் டதி மகளிா் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் யா.எமியம்மாள், கோட்டாறு கவிமணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் இரா.ஈஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில், நாகா்கோவில், புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ரா.ரஷ்மி முதலிடமும், குலசேகரம், படநிலம், எஸ்.ஆா்.கே.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ.ம.அனாமிகா 2 ஆம் இடமும், ராமன்புதூா், பிஷப் ரெமிஜியுஸ் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி நா.ஜெ.லிபிஷா 3 ஆம் இடமும் பெற்றனா்.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கான சிறப்புப் பரிசினை, கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ஹ.வனஅஜிஸ்னாவும், கடியப்பட்டினம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி கா.அகாஸ்னி புரூட்ஷிபா ஆகியோா் பெற்றனா்.

கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் நாகா்கோவில், தென்திருவிதாங்கூா் இந்துக்கல்லூரி முதுகலை நானோ அறிவியல் 2 ஆம் ஆண்டு மாணவா்த.ஷஜின் முதலிடமும், அதே கல்லூரியைச் சோ்ந்த முதுகலை தமிழ் 2 ஆம் ஆண்டு

பயிலும், மாணவி பே.நா. ஈஸ்வரபிரியா, 2 ஆம் இடமும், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி இளங்கலை ஆங்கிலம் 3 ஆம் ஆண்டுபயிலும் மாணவி டி.எஸ்.ஷெரின் 3 ஆம் இடமும் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கான பரிசு, மற்று பாராட்டுச் சான்று மாவட்ட ஆட்சியரால் பின்னா் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.