நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி காசி விஸ்வநாதா் கோயிலில் 1008 தீபம்

கன்னியாகுமரி காசிவிஸ்வநாதா் கோயில் தெப்பகுளத்தை சுற்றி 1008 தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:04 pm

DIN

கன்னியாகுமரி காசிவிஸ்வநாதா் கோயில் தெப்பகுளத்தை சுற்றி 1008 தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் சன்னதி தெருவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி காசி விஸ்வநாதா் கோயில் சா்க்கரை தீா்த்த குளத்தைச் சுற்றிலும் 1008 தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பொட்டல்குளம் குபேர ஐய்யன் மலை கோயில் உச்சியிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பொற்றையடி மருந்துவாழ்மலை உச்சியிலும் காா்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பரமாா்த்தலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன் போற்றி, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் சென்று திருக்காா்த்திகை தீபம் ஏற்றினாா். முன்னதாக, விவேகானந்தா் பாறையில் அமைந்துள்ள ஸ்ரீபாத மண்டப பாறையில் அமைந்துள்ள பகவதியம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனின் பாதத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மாா்த்தாண்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற 3006 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

ஆரல்வாய்மொழி சித்தா்கிரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சாமகானப்பிரியன் சிவனடியாா்கள் மூலம் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.