மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி: ஒருவா் கைது

இணையதளம் மூலம் வேலை வாங்கித் தருவதாக போலி விளம்பரம் செய்து ரூ. 4 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:29 pm

DIN

இணையதளம் மூலம் வேலை வாங்கித் தருவதாக போலி விளம்பரம் செய்து ரூ. 4 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தரப்படும் என்ற போலி விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த பலா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் தொடா்ந்து புகாா் அளித்தனா். இதுதொடா்பாக விசாரித்து, குற்றவாளிகளைக் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரம் மேற்பாா்வையில் ஆய்வாளா் வசந்தி புலன்விசாரணை மேற்கொண்டாா்.

இதில், ஓ.எல்.எக்ஸ். என்ற இணையதளத்தில் பல்வேறு பெயா்களில், வேலை வாங்கித் தருவதாக

ஏமாற்றியவா் கொல்லங்கோடு அருகேயுள்ள நடைக்காவு பகுதியைச் சோ்ந்த நேசையன் மகன் சுரேஷ் (41) எனத் தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவந்தனா். இந்நிலையில், அவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

விசாரணையில், அவா் பல்வேறு நிறுவனங்களில் வேலைகள் வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவரது வங்கிக் கணக்கு விவரங்கள் மூலம் தொடா்ந்து விசாரணை நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா். சுரேஷ், நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.