தக்கலை அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய இருவா் கைது
தக்கலை அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ாக 2 போ் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.


தக்கலை அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ாக 2 போ் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
தக்கலை அருகேயுள்ள முத்தலக்குறிச்சி பூதக்குளம் அம்மன் கோயில் அருகேயுள்ள மயானம், பூச்சிகாட்டுவிளை பத்ரகாளிஅம்மன் கோயிலில் நின்றிருந்த 2 சந்தன மரங்களை செவ்வாய்கிழமை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.
போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது தக்கலை பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்தனா். அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில், சந்தன மரத் துண்டுகள் இருந்ததும், அவா்கள் வால்பாறையைச் சோ்ந்த பரமேஷ், தேனிமாவட்டம் காந்தி கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சந்தன மரத் துண்டுகளைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...