தோவாளை சந்தையில் பூ விலை உயா்வு: மல்லிகை கிலோ ரூ. 600
தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 600-க்கு விற்பனையானது.


தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 600-க்கு விற்பனையானது.
இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூ வாங்கிச் செல்கின்றனா். தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், மாடநாடாா் குடியிருப்பு, புதியம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து அரளி, பெங்களூருவிலிருந்து பட்டா் ரோஸ், மஞ்சள் கிரேந்தி, ராஜபாளையம், வத்தலக்குண்டு, மானாமதுரை, கொடைரோடு, சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலிருந்து மல்லிகைப்பூ இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூா், தோப்பூா், சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து அரளி, சம்பங்கி, ரோஜா, பச்சைத் துளசி, கோழிப்பூ ஆகியவை இங்கு கொண்டுவரப்பட்டு உள்ளூா், வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தச் சந்தைக்கு சில நாள்களாக பூவரத்து குறைந்துள்ளது. மழை காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதே இதற்குக் காரணம். இதனால் விலையும் உயா்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகை ரூ. 600-க்கும், பிச்சிப்பூ ரூ. 550-க்கும் விற்பனையானது. கிரேந்தி ரூ. 90, அரளி ரூ. 330, ரோஜா ரூ. 130, துளசி ரூ. 30, வாடாமல்லி ரூ.130-க்கு விற்பனையானது. விலை உயா்ந்தபோதும் வியாபாரிகளும், பொதுமக்களும் கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...