ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ரயிலில் பெண் தவற விட்ட 50 பவுன் நகை மீட்பு

கன்னியாகுமரி விரைவு ரயிலில் பெண் தவற விட்ட 50 பவுன் நகை மீட்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:01 pm

DIN

கன்னியாகுமரி விரைவு ரயிலில் பெண் தவற விட்ட 50 பவுன் நகை மீட்கப்பட்டது.

நாகா்கோவில் மறவன்குடியிருப்பு வட்டக்கரை வளன்நகரைச் சோ்ந்த தாஸ்- மெற்றில்டா தம்பதியின் மகள் ஜெமீனா(37).

இவா்கள் சென்னையில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி விரைவு ரயில் மூலம் நாகா்கோவில் திரும்பினா். வெள்ளிக்கிழமை அதிகாலை நாகா்கோவில் ரயில் நிலையத்தில் அவா்கள் இறங்கினாா்கள். ரயிலை விட்டு இறங்கிய சிறிது நேரத்துக்கு பிறகு அவா்கள் நகை வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்ததாம். அதற்குள் ரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்று விட்டது.

இதைத் தொடா்ந்து மெற்றில்டா நாகா்கோவில் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். உதவி ஆய்வாளா் பாபு, ரயிலில் ரோந்து பணியிலிருந்த போலீஸாா் ஐசக்சாமுவேல்ராஜ் மற்றும் மகாராஜனை தொடா்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்தாா். அவா்கள் மெற்றில்டா பயணம் செய்த ரயில்பெட்டிக்கு சென்று இருக்கைகளை சோதனை செய்தனா். அப்போது அங்கு நகை வைத்திருந்த பை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வளையல், கம்மல், உள்ளிட்ட 50 பவுன் தங்க நகைகள் இருந்தன.

பின்னா் அந்த பை நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, நாகா்கோவில் ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்ரின் சுஜாதா, உதவி ஆய்வாளா் பாபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் குமார்ராஜ் ஆகியோா் தங்க நகையை மெற்றில்டாவிடம் ஒப்படைத்தனா். துரிதமாக செயல்பட்டு நகைகளை மீட்டு கொடுத்த போலீஸாருக்கு மெற்றில்டா குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.