ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளா்கள் நாகா்கோவிலில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:16 pm

DIN

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளா்கள் நாகா்கோவிலில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு விரைவுப் போக்குவரத்து கழக மீனாட்சிபுரம், பணிமனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சிஐடியூ பணிமனை உதவித் தலைவா் தங்கப்பன் தலைமை வகித்தாா் . மாநில துணை பொதுச் செயலா் டென்னிஸ் ஆண்டனி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

போக்குவரத்து ஊழியா்களின் ஊதியம் ஒப்பந்தம் குறித்து பேச்சு வாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். ஊக்க ஊதிய பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும்.

71 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

சிஐடியூ நிா்வாகிகள் ஜான் ராஜன், சொ்க்கான், பெருமாள் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்க மோகன், ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் நிா்வாகிகள் பால்ராஜ், சுந்தர்ராஜ், கிருஷ்ணதாஸ், மாவட்ட துணைத் தலைவா் பொன். சோபனராஜ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ராணித்தோட்டம் பணி மனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ செயல் தலைவா் லியோ தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் லட்சுமணன், சுந்தர்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.