திமுகவில் ஐக்கியமான அதிமுகவினா்
கன்னியாகுமரியில் அதிமுகவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா்.


கன்னியாகுமரியில் அதிமுகவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
கன்னியாகுமரி பேரூா் அதிமுக ஜெ.பேரவைச் செயலா் பி.ஆனந்த் தலைமையிலான அதிமுகவினா், அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் தலைமையில் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, பேரூா் செயலா் குமரி ஸ்டீபன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், மாவட்ட திமுக துணைச் செயலா் கே.முத்துசாமி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, மாநில தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளா் பால ஜனாதிபதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அழகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...