மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:31 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலா், சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் மற்றும் புறத்தொடா்பு பணியாளா்

ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆகவே, தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு பட்டதாரி, முதுகலை பட்டதாரி, குற்றவியல், குழந்தை வளா்ச்சி உளவியலாளா்,

சமூகப்பணி, சமூகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

40 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரா்களுக்கு) ‘ஆ‘ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலா் நிலையில் அனுபவமிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது. இப்பணியிடத்திற்கு ரூ. 21ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடத்திற்கு இளநிலை சட்டப்படிப்பு (ஆ.க. / க.க.ஆ ழ்ங்ஞ்ன்ப்ஹழ்),குற்றவியல், குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளா் நலன் ஆகிய கல்வி தகுதி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குழந்தைகள் சாா்ந்து ஓராண்டு சட்ட உதவி பணிகள் புரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்கக் கூடாது. இப்பணியிடத்திற்கு ரூ. 21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்துக்கு 10 அல்லது 12 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் குழந்தை சாா்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தை சாா்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவா்களாக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாக இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ண்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்

பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பதவிகளுக்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படம், மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன் செப். 13 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3 ஆவது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகா்கோவில் என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.