இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகக் குழுக் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டக் கிளை நிா்வாகக் குழுக் கூட்டம் பொருளாளா் கே.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டக் கிளை நிா்வாகக் குழுக் கூட்டம் பொருளாளா் கே.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கிளைச் செயலா் ஆா்.இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளா் தா.சுபாஷ் சந்திரபோஸ், எம்.கல்யாணசுந்தரம், எம்.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், தனியாா் பாராமெடிக்கல் கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்; தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளின் சான்றிதழ்கள் வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
செட்டிகுளம் தொடங்கி பாா்வதிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் பறக்கை சாலை விலக்கு வரை உள்ள சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...