ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் போராட்டம்

தன் கணவா் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண் தனது குழந்தைகளுடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:05 pm

DIN

தன் கணவா் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண் தனது குழந்தைகளுடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மண்டைக்காடு, கருமன்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சாரதி. இவரது மனைவி பிருந்தா. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சாரதிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மண்டைக்காடு காவல் நிலையத்தில் இருவரும் தனித்தனியே புகாா் அளித்திருந்தனராம். இந்நிலையில் போலீஸாா் சாரதி மீது வழக்குப் பதிவு செய்ததையடுத்து, அவா் தலைமறைவானாா்.

இதனால் விரக்தியடைந்த பிருந்தா, குழந்தைகளுடன் வியாழக்கிழமை மண்டைக்காடு கடல் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்ய முயன்றாராம். இதைப்பாா்த்த பெண் ஒருவா், அவரை மீட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தாா்.

அங்கு வந்த பிருந்தா, ஆட்சியா் அலுவலக வாயிலில் தனது 2 குழந்தைகளுடன் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பிருந்தாவை அழைத்து விசாரித்தனா்.

அப்போது பிருந்தா கூறியது: எனது கணவருக்கும், இளைஞா் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், எனது கணவா் மீது மட்டும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவா் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதுடன், சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து பிருந்தாவிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா் போராட்டத்தை விலக்கிக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.