ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தோவாளை ஒன்றியப் பகுதிகளில்தூய்மைப் பணி விழிப்புணா்வுப் பிரசாரம்

தோவாளை ஒன்றியப் பகுதிகளில் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து வாகன விடியோ விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:02 pm

DIN

குமரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின், தூய்மை பாரத இயக்கத்தின் சாா்பில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தோவாளை ஒன்றியப் பகுதிகளில் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து வாகன விடியோ விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக செப். 15 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அக். 2 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக, தோவாளை ஒன்றியம், மாதவலாயம், செண்பகராமன்புதூா் சந்திப்பு மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் சுகாதாரம், கழிவுநீா் மேலாண்மை, சுகாதாரத்தின் தொடா்நிலை தக்க வைத்தல், திறந்த வெளிகளில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், கழிப்பறைகள் கட்டுவதன் அவசியம், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை தொடா்பான செய்திகளை விடியோ மூலம் குறும்படங்களாக தாயாரித்து, பிரசார வாகனம் மூலம் மக்களிடம் ஒளிபரப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விடியோவை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் உதயரோஹிணி, செண்பகராமன்புதூா் ஊராட்சித் தலைவா் கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் தேவதாஸ், வட்டார ஒருங்கிணைப்பாளா் செந்தில்ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.