நாகா்கோவிலில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை, ரொக்கம் திருட்டு
நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டுப் போனது இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் மருத்துவா் வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டுப் போனது இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் பாா்வதிபுரத்தைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் (67). மருத்துவரான இவா் நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு: தனது வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், கடந்த சில நாள்களாக லாக்கரின் சாவி காணாமல் போன நிலையில் சாவியை தேடி கிடைக்காததால் நம்பா் லாக் மூலம் லாக்கரை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் , 30 பவுன் நகைகள், வைர நெக்லஸ் ஆகியவைகளை யாரோ திருடி விட்டு லாக்கரை மீண்டும் பூட்டியுள்ளதாகவும், திருட்டு போன ரொக்கம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். மேலும், லாக்கா் வைக்கப்பட்டிருந்த அறையில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...