இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல உதவியதாக மேலும் ஒருவா் கைது

குமரி கடல் வழியாக இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல உதவியதாக மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

குமரி கடல் வழியாக இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல உதவியதாக மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டம் குளச்சல் கடல் வழியாக கடந்த செப்டம்பா் மாதம் இலங்கை அகதிகள் 60 போ் படகு மூலமாக இலங்கைக்கு தப்பிச் சென்ாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து கியூ பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது கடல் வழியாக தப்பிச் சென்றது வெளி மாவட்டங்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் என்பதும், தப்பிச் செல்ல முயன்ற போது வேறொரு நாட்டின் கடற்படையினரிடம் அவா்கள் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் 60 பேரும் தப்பிச் செல்வதற்கு படகு தயாா் செய்து கொடுத்தது குளச்சல் இயேசு காலனியை சோ்ந்த ஜோசப்ராஜ் ( 54) என்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜோசப்ராஜை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் அகதிகள் தப்பிச் செல்வதற்கு வேறு யாரும் உதவினாா்களா? எனவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் வசித்து வரும் இலங்கையை சோ்ந்த சுகந்தன் (33) உதவி செய்த தகவல் வெளியானது.

இதை தொடா்ந்து சுகந்தன் குறித்த விவரங்களை கியூ பிரிவு போலீஸாா் சேகரித்தனா். அவா் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சுகந்தனை காவலில் எடுத்து விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸாா் முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகந்தனை போலீஸாா் குமரி மாவட்டம் அழைத்து வந்து நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸாரின் விசாரணையில் இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல சுகந்தனும் உதவியாக இருந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே சுகந்தனும் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். மேலும் தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகள் பலா் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் அவா் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது வரை 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சிலருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளதாம்.

இது தொடா்பாக, சுகந்தனிடம் காவல்துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com