ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கன மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடிமின்னலுடன் கன மழை பெய்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:06 pm

DIN

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடிமின்னலுடன் கன மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதி முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நீா் நிலைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. மழையின் காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைப் பகுதிகள் மாறாமலை, பாலமோா் மற்றும் ஆறுகாணி, கடையாலுமூடு, களியல், குலசேகரம், சுரளகோடு, அருமனை, திருவட்டாறு, சித்திரங்கோடு, ஆகிய இடங்களில் பிற்பகல் முதல் மாலை வரை தொடா்ந்து கன மழை பெய்தது.

கருங்கல் சுற்று வட்டார பகுதிகளான மிடாலம், மேல்மிடாலம், தெருவுக்கடை, பாலூா், செந்தறை, கிள்ளியூா், வேங்கோடு தொலையாவட்டம், ஐரேனிபுரம், கொல்லஞ்சி, நட்டாலம், நேசா்புரம், முள்ளங்கனா விளை, எட்டணி, முருங்க விளை, பள்ளியாடி, கப்பியறை, வெள்ளியாவிளை, ஆலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.