மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்ற முடிவு

தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது
மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்ற முடிவு

தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் பணி தொடங்கியுள்ளது. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்பட மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு.

மாணவா்களுக்கு கையடக்க கணினி கொடுப்பதாக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், மாணவா்கள் அதனை பயன்படுத்துவதில் சேதாரம் ஆகும் என்பதால், மீண்டும் மடிக்கணினியாயே வழங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் மடிக்கணினி வழங்காமல் விட்டுச் சென்றுள்ளனா். அவற்றையும் சோ்த்து கொடுக்கும் நடவடிக்கையில் உள்ளோம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த அமைச்சருக்கு கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் பா.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா் என்.தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com