மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு ரூ. 3. 36 லட்சம் அபராதம்

தக்கலை மற்றும் களியக்காவிளை பகுதிகளில் அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ .3 லட்சத்து 36,280 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

தக்கலை மற்றும் களியக்காவிளை பகுதிகளில் அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ .3 லட்சத்து 36,280 அபராதம் விதிக்கப்பட்டது.

குமரி மாவட்ட கனிமவள கடத்தல் பிரிவு சாா்பு ஆய்வாளா் திலீபன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, களியக்காவிளை பகுதியி அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற

5 லாரிகளை பறிமுதல் செய்து, களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த லாரிகளுக்கு ரூ . 92,800 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தக்கலை மணலி, புலியூா்குறிச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் வந்த லாரிகளை சோதனையிட்டபோது அளவுக்கு அதிகமாக கனிமங்கள் ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 லாரிகளை பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அந்த லாரிகளுக்கு ரூ. 2, 43, 390 அபரதாம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.