ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அய்யா வைகுண்டா் உதய தினம்: பொது விடுமுறை கோரி மனு

அய்யா வைகுண்டா் உதய தினமான மாசி மாதம் 20 (நிகழாண்டு மாா்ச் 4) தமிழகம் முழுவதும் பொது விடுமுறை

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:19 pm

DIN

அய்யா வைகுண்டா் உதய தினமான மாசி மாதம் 20 (நிகழாண்டு மாா்ச் 4) தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கனிமொழி எம்.பி.யிடம் சாமிதோப்பு பாலஜனாதிபதி மனு அளித்தாா்.

மனு விவரம்: பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து தாழக்கிடப்பாரை ‘தற்காப்பதுவே தாமம்‘ என்கிற நிலையில் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தாா் அய்யா வைகுண்டா். தீண்டாமை என்னும் தீதை அகற்ற தொட்டு நாமமிடும் நிலையை உருவாக்கினாா். ஆண்கள் தலையில் தலைப்பாகையுடன் வழிபட அனுமதித்து ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்தாா்.

அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் தலைமைப்பதி அமைந்துள்ளது. மேலும், சென்னை, கோவைா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் அய்யா வைகுண்டா் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

ஏற்கெனவே, அய்யா வைகுண்டா் உதய தினமான மாசி மாதம் 20ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.