மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய்ரூ .5 கோடியில் சீரமைக்கப்படும்: ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ.

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் ரூ .5 கோடியில் சீரமைக்கப்படவுள்ளது என்றாா் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ. குளச்சலில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:21 pm

DIN

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் ரூ .5 கோடியில் சீரமைக்கப்படவுள்ளது என்றாா் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ. குளச்சலில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

குளச்சல் நகராட்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஏ.வி.எம். கால்வாயை சீரமைக்க ரூ .5 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாய் சீரமைக்கப்பட்ட பின், இப்பகுதியில் நிலத்தடி நீரில் உப்பு கலப்பது நின்று விடும். குளச்சல் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். அதற்காக மருத்தவமனையைப் பாா்வையிட சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வரவுள்ளாா். குளச்சல் போா் வெற்றித்தூண் வளாகம் சுற்றுலாத்தலமாக மாற்றப்படவுளளது. தற்போது கொட்டில்பாட்டில் ரூ 10 கோடி மதிப்பில் தடுப்பு சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோடி முனை, குறும்பனை மீனவ கிராமங்களில் ரூ 1.05 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ளது. வாணியக்குடியில் புதிய மீன்பிடித்துறைமுக திட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . உள்ளாட்சி தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் அமோக வெற்றி பெறுவா் என்றாா் அவா்.

பேட்டியின் போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் முனாப், நகர காங்கிரஸ் தலைவா் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.