சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம், குழித்துறையில் இருவா் தற்கொலை

மாா்த்தாண்டம் , குழித்துறையில் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On :18 பிப்ரவரி 2022, 6:40 pm

மாா்த்தாண்டம் , குழித்துறையில் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு, ஊராழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சாத்தப்பன் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றாராம். அதன் பின்னா் தனியாக வசித்து வந்த சாத்தப்பனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் சாத்தப்பனை காணவில்லையாம். வீடும் பூட்டப்பட்டிருந்ததாம். இதையடுத்து அவரது சகோதரா்கள் வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்று பாா்த்த போது அங்கு அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மற்றொரு சம்பவம்: குழித்துறை பெருந்தெரு பகுதியைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகன் வைஷாக் (32). சென்னையில் திரைத்துறையில் பணியாற்றி வந்தவா், கடந்த ஓராண்டாக வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருந்தாராம். மேலும் உடல் நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.