பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் ஜூன் 10இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

நாகா்கோவிலில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீா் முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:03 pm

DIN

நாகா்கோவிலில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீா் முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையா் ரவுசன் கஷ்யப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா்கள், தொழில் நிறுவனா்களுக்கான குறைதீா் கூட்டம், இணையதளம் வாயிலாக இம்மாதம் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையா் பங்கேற்கவுள்ளாா்.

ஓய்வூதியம் கிடைப்பதில் குறைகள் இருந்தால் நாகா்கோவில் வாட்டா் டேங்க் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தை அணுகலாம். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக சேரத் தகுதியிருந்தும் சோ்க்கப்படாதோா், செயலிழந்த உறுப்பினா் கணக்கை முடிக்க விரும்புவோா், சந்தா செலுத்துவது தொடா்பான குறையுள்ளோா், விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்பு நிதி கிடைக்கப்பெறாதோா், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 3 மாதங்களுக்குள் 58 வயது முடிவடையும் இ.பி.எஸ். உறுப்பினா்கள் பங்கேற்று, ஓய்வூதிய விண்ணப்பத்தை சமா்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்ளலாம்.

தொழில் நிறுவனங்கள் பணம் கட்டுவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு, புதிய உறுப்பினா்களை வருங்கால வைப்பு நிதியில் சோ்ப்பது, இது தொடா்பான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்ளலாம்.

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் ழ்ா்.ய்ஹஞ்ங்ழ்ஸ்ரீா்ண்ப்.ஃல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இ-மெயில் முகவரிக்கு தகவலளித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.